Connect with us

Tamizhanmedia.net

இமாலய வெற்றி பெற்ற “ஜெயிலர்”.. பயத்தில் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய ரஜினி.. வெளியான பகீர் தகவல்..!!

CINEMA

இமாலய வெற்றி பெற்ற “ஜெயிலர்”.. பயத்தில் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய ரஜினி.. வெளியான பகீர் தகவல்..!!

நெல்சன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். திரையரங்குகளில் வெளியான சில நாட்களிலேயே ஜெயிலர் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இதனை கொண்டாடும் விதமாக லைக்கா நிறுவனம் ரஜினி காந்த், நெல்சன், இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக கொடுத்துள்ளார். இதேபோல படத்தின் கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

   

இதனையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 170-ஆவது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை த.செ. ஞானவேல் இயக்க உள்ளார். இயக்குனர் த.செ.ஞானவேல் ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர். படபிடிப்பு இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் ரஜினிகாந்த் ஞானவேலை சந்தித்து ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் இந்த படமும் ஹிட் ஆக வேண்டும்.

எனவே உங்களுடைய கதை 1% கூட குறைய கூடாது. எதுவும் தப்பாகிடக்கூடாது என கூறியதாக தெரிகிறது. முதலில் தைரியமாக பதில் சொன்ன ஞானவேல் பின்னர் சற்று தயங்கியதாக தெரிகிறது. இதனால் படத்தின் கதையை சிறப்பாக உருவாக்கி வாங்க எவ்வளவு டைம் வேணாலும் எடுத்துக்கோங்க என கூறி படபிடிப்பை ரஜினி நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு படப்பிடிப்பு தள்ளிப்போனது. ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அடுத்து தான் நடிக்க உள்ள படங்கள் தோல்வியை தழுவக்கூடாது என்பதில் ரஜினிகாந்த் கவனமாக இருக்கிறார். இதற்கிடையே தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் அவர் சிறப்பு ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top