Connect with us

Tamizhanmedia.net

‘வந்துட்டான்ல என் ஹார்ட்ட கொத்தோட புடுங்கிட்டு போக’…! லேட்டஸ்ட் லுக்கில் நடிகர் சிம்பு …! மாஸாக வெளிவந்த புகைப்படங்கள்…!

CINEMA

‘வந்துட்டான்ல என் ஹார்ட்ட கொத்தோட புடுங்கிட்டு போக’…! லேட்டஸ்ட் லுக்கில் நடிகர் சிம்பு …! மாஸாக வெளிவந்த புகைப்படங்கள்…!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு.  இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கம் திரைப்படத்திற்காக வெளிநாடு சென்று தற்போது சிம்பு தன்னுடைய உடலை பிட்டாக வைத்துள்ளார்.

   

சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து சிம்புவின் புதிய லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த சிம்பு போன்று காணப்பட்டார்.

தாடி மற்றும் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் சிம்புவை பார்த்த ரசிகர்கள் எஸ் டி ஆர் 48 திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என்று கூறி வருகிறார்கள். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்பொழுது இந்தப் படத்தை குறித்த முழு அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இதில் சிம்பு அண்ணன், தம்பி இரட்டை வேடத்தில் ஹீரோ மற்றும் வில்லனாகவும் முட்டி மோத போகிறார் என கூறப்படுகிறது.

இதுவரை எஸ்டிஆர் நடிப்பில் வெளியான படங்களில் இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கக்கூடிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல இந்த படத்தில் சிம்பு மற்றும் ஏஆர் ரகுமான் இருவரும் 6-வது முறையாக STR 48 படத்தில் இணையபோகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு மாஸான லுக்கில் வலம் வரும் புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

ALSO READ  'இது தல தரிசனம்'...! தல அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சீரியல் நடிகர் தீபக் மற்றும் அவரது மனைவி...! வைரலாகும் புகைப்படம்...!

More in CINEMA

To Top