
CINEMA
‘இது தல தரிசனம்’…! தல அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சீரியல் நடிகர் தீபக் மற்றும் அவரது மனைவி…! வைரலாகும் புகைப்படம்…!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வருகின்றனர்.
நடிகர் அஜித் கேமராவை தாண்டி பொது இடத்தில் வர மாட்டாரா, ஒரு புகைப்படம் எடுக்க மாட்டோமா என ஏங்காத ரசிகர்கள் இல்லை. ஆனால் அவரோ உள்ளூரே வேண்டாம் என வெளிநாடுகளில் பைக் டூர் சென்று ஜாலியாக இருக்கிறார். வெளியே அவரைக் கண்டாலும் மரியாதையோடு அவரை ரசிகர்கள் அணுகினாலும் பரவாயில்லை, ஆனால் அந்த இடத்தையே மோசமாக்கி விடுகிறார்கள்.
இதனாலேயே அவர் அவ்வளவாக வெளியே சுற்றுவது இல்லை. இந்த நிலையில் தான் நேற்று சென்னையில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் நடிகர் அஜித் கலந்துகொண்டிருக்கிறார். இந்த விழாவிற்கு சென்றுள்ள விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் தீபக், அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாவிலும் வெளியிட்டுள்ளார்.
அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். மேலும் நடிகர் தீபக் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளாரா? என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.