
CINEMA
பிக் பாஸ் சீசன் 7 ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள் தானா?… இணையத்தில் வெளியான இறுதி லிஸ்ட்…
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘பிக் பாஸ்’ இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில்இந்நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொள்பவர்கள் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள்.
அதனால் இந்த ஷோவுக்கு செல்ல பல பிரபலங்களும் வெயிட்டிங் உள்ளனர். ‘பிக் பாஸ் சீசன் 6’ சென்ற வருடம் நிறைவு பெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள், இரண்டு அணிகள் என பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக கமலஹாசன் ப்ரோமோவில் தெரிவித்திருந்தார்.
தற்பொழுது இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தொடர்பான விவரங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் பப்லு பிரித்விராஜ், நடிகர் அப்பாஸ், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், ஜோவிகா விஜயகுமார், குமரன் தங்கராஜன் , ராஜலக்ஷ்மி செந்தில் , பயில்வான் ரங்கநாதன், இந்திரஜா ஷங்கர், ஸ்ரீதேவி விஜயகுமார் போன்றோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த லிஸ்ட் உண்மையா என்பதை.