சமீபத்தில் மறைந்த ஏவிஎம் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் படத்திறப்பு விழா சென்னை ஏவிஎம் பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, சரவணன் சார் எனக்கு தனிப்பட்ட முறையில் பல நன்மைகளை செய்தவர். கோடம்பாக்கத்தில் எனக்கு ஒரு இடம் இருந்தது. அதை சும்மா விடக்கூடாது என்று சொல்லி அவரே பிளான் பண்ணி கொடுத்து ராகவேந்திரா திருமண மண்டபம் கட்ட வைத்தார். போயஸ் கார்டனில் என் வீட்டுக்கு பக்கத்தில் நிறைய இடம் இருந்தது. நான் சினிமாக்காரன் என்பதால் அதற்கு 10 மடங்கு விலை சொன்னார்கள். அதனால் நான் சுவர் கட்டி வைத்திருந்தேன். என் வீட்டுக்கு ஒரு முறை வந்த சரவணன் சார் அந்த இடத்தை அதிக விலை என்றால் கூட வாங்கி விடுங்கள். மற்றவர்கள் வந்தால் பிரச்சனை. நீங்கள் வருத்தப்படுவீங்க என்றார். நான் அதைச் செய்தேன். சிவாஜி படத்துக்கு பிறகு ஆண்டுக்கு ஒரு படம் பண்ணுங்க. அது உடம்புக்கு மனசுக்கு நல்லது என்றார். அதை இப்பவும் கடைப்பிடிக்கிறேன்.
அசையும் சொத்து அசையா சொத்து என்பார்கள். அசையாத சொத்துக்கு விலை ஜாஸ்தி. நம் மீது அக்கறை கொண்டவர்கள் நம்மை விரும்புகிறவர்கள் அசையா சொத்துகள்தான். கே பாலசந்தர் சோ பஞ்சு அருணாசலம் ஆர்எம் வீரப்பன் கலைஞர் சரவணன் என பலர் அப்படி இருந்தார்கள். நம் மீது அன்பு கொண்டவர்களை காலம் சீக்கிரம் கொண்டு போய் விடுகிறது. பேர் புகழ் குழந்தைகள் சொத்து எல்லாம் இருந்தாலும் நல்ல மனிதர்கள் போகும் போது அனாதையான பீஃல் வருகிறதுஎன்று நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…
சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…
சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…