தமிழ் சினிமாவில் எப்போதுமே நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் டீசர் டிரெய்லர் பர்ஸ்ட் லுக் ஃபர்ஸ்ட் சிங்கிள் செகண்ட் சிங்கள் போன்றவை வெளியாகும் போது அவை பெரிய அளவில் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பல சாதனைகளைப் படைக்கும்.
நடிகர் விஜயின் கடைசி படமாக ஜனநாயகன் டிரெய்லர் நேற்று மாலை 6:45 மணியளவில் வெளியானது. யூடியூப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலை தளங்களில் வெளியிடப்பட்டது. சற்று முன்பு வரை யூடியூப் தளத்தில் டிரெய்லர் பார்வை எண்ணிக்கை தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் சேர்த்து ரியல் டைம் பார்வைகளாக 46 மில்லியன் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த தி கோட் படத்தின் 24 மணி நேர டிரெய்லர் சாதனை அதாவது 39 மில்லியன் பார்வை சாதனையை ஜனநாயகன் படம் டிரெய்லர் முறியடித்துள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் 26 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி யூடியூப் தளத்தில் தமிழில் 30 மில்லியன் தெலுங்கில் 6 மில்லியன் இந்தியில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும். 23 மணி நேரத்தில் இந்த சாதனை ஜனநாயகன் டிரெய்லருக்கு கிடைத்துள்ளது.
வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தன் தாயை இழந்துவிட்டோம் என்ற உண்மை கூடத் தெரியாமல், யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்படும்…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…
உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…
புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…