ரஜினி நடிப்பை பார்த்து டயலாக் மறந்து மெய்மறந்து நின்ற நடிகர்.. நடிக்க சொல்லி கேட்ட தலைவர்.. சுவாரசிய சம்பவம்..!!

By Mahalakshmi on சித்திரை 20, 2024

Spread the love

லொள்ளு சபாவில் நடித்து பிரபலமான சந்தானம் மன்மதன் என்ற திரைப்படத்தின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து படிப்படியாக முன்னேறிய சந்தானம் ஒரு காலகட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகரின் ஒருவராக இருந்தார். தமிழ் சினிமாவில் இவர் இல்லாத படங்களை இல்லை என்ற அளவிற்கு இருந்தது.

   

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கின்ற பாஸ்கரன், நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, வீரம், பில்லா, சிறுத்தை, என்றென்றும் புன்னகை, பொல்லாதவன் என பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். டைமிங்கில் இவர் கொடுக்கும் கவுண்டர்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கவுண்டமணியின் பார்முலாவை ஃபாலோ பண்ணிய சந்தானத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

   

 

எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதே அளவுக்கு விமர்சனங்களையும் சந்தித்தார் சந்தானம். கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திற்கு பிறகு ஹீரோவாக களமிறங்கிய சந்தானம் பெரிய அளவு ஹிட் திரைப்படங்களை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். நடிகர் சந்தானம் ரஜினியின் தீவிர ரசிகர். பல்லாவரத்தில் தனது சிறுவயதில் ரஜினியின் படங்கள் என்றால் முதல் நாளை தியேட்டருக்கு சென்று விடுவாராம்.

இவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்த முதல் திரைப்படம் எந்திரன். அந்த திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தபோது ரஜினி டயலாக்கை முடித்தவுடன் சந்தானம் பேச வேண்டும். ஆனால் அவரது டயலாக்கை பேசாமல் ரஜினியவே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாராம் சந்தானம். பின்னர் ரஜினி சந்தானத்தை பார்த்து உங்கள் டயலாக்கை கூறுங்கள் என்று சொன்னவுடன் நீங்கள் நடிப்பதை பார்த்து கொண்டிருந்தேன் என்று கூறியிருந்தார். நீங்கள் என் நடிப்பை பார்த்து விட்டீர்கள் நான் உங்கள் நடிப்பை பார்க்க வேண்டாமா? என்று கேட்டாராம் நடிகர் ரஜினி. இந்த சம்பவத்தை ஒரு இன்டர்வியூவில் பகிர்ந்திருந்தார் சந்தானம்.