அடிக்கிற வெயிலுக்கு, குட்டையான ட்ரவுஸரில் ஹாயாக காத்து வாங்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் ஈஸ்வரி.. இவரா இப்படி..?

By Begam on சித்திரை 21, 2024

Spread the love

சன் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று எதிர்நீச்சல் சீரியலாகும். இதில் நடிகை கன்னிகா ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக அதிகமான ரசிகர் பட்டாளமே இவருக்கு உருவாகி உள்ளது. இவர் மதுரையைச் சார்ந்தவர். 2002 ஆம் ஆண்டு வெளியான ‘5 ஸ்டார்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து தமிழில் எதிரி, டான்சர் ,வரலாறு, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர்  மலையாள படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற பல மொழி  திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் 2009ஆம் ஆண்டு மலையாளத்தில் சிறந்த நடிகை என்ற விருது பெற்றுள்ளார்.

   

 

அதே  ஆண்டு கேரளா திரைப்பட சங்கத்தின் சிறப்பு நடிகை விருதும் பெற்றுள்ளார்.தனது இனிய குரலாலும் தமிழில்  பின்னணி பாடகராக பாடியுள்ளார். இவர் நடிகை மட்டுமல்லாமல் பல  திரைப்பட நடிகைகளுக்கு  டப்பிங் குரல் கொடுத்துள்ளார். ‘சச்சின்’ திரைப்படத்தில் ஜெனிலியா க்கும், ‘அன்னியன்’ திரைப்படத்தில் சதாவுக்கும், ‘சிவாஜி’ திரைப்படத்தில் ஸ்ரேயாவுக்கும் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

2008 ஆம்ஆண்டு நடிகை கன்னிகாவுக்கும்,  நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஸ்யாம் ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்தது.  இவருக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.  திருமணம் முடிந்ததும்  அமெரிக்கா சென்ற இவர், தன் மகன் தமிழ் கலாச்சாரபடி வளர வேண்டும் என்பதற்காக திரும்பி சென்னைக்கு வந்தார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கனிகா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது குட்டையான ட்ரவுஸர் அணிந்து  இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.