தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன், அவரை அடுத்து விஜய் மற்றும் அஜீத் இருக்கின்றனர். இந்த நான்கு நடிகர்கள் மட்டுமே இப்போதைக்கு தமிழ் சினிமா என்ற நாற்காலிக்கு நான்கு கால்களாக பார்க்கப்படுகின்றனர். வசூலில் இவர்களது படம் மட்டுமே ஏமாற்றத்தை அளிக்காமல் தொடர்ந்து லாபத்தை கொடுத்து வருகிறது. இதில் லாபத்தில் குறையுமே தவிர, எந்த படமும் நஷ்டம் இருக்காது என நம்பி தயாரிப்பாளர்கள், இவர்களது படங்களில் நூற்றுக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

#image_title
இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ துவங்கப்பட உள்ளது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் திட்டத்தில் படப்பிடிப்புகள் நடத்தப்பட உள்ளது. இதில் சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், ரன்பீர் சிங் போன்றவர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிக்கவந்த காலகட்டத்தில் வில்லன், கதாநாயகன் என்ற இரண்டு விதமான கேரக்டர்களில் மட்டுமே நடித்தார். ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த சூழலில் அவரை அழைத்த இயக்குநர் கே பாலசந்தர், தில்லு முல்லு என்ற காமெடி படத்தில் நடிக்க சொன்னார். மீசை வைத்தால் அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலிய பெருமாள் மகன் சந்திரன், மீசை இல்லாவிட்டால் அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலிய பெருமாள் மகன் இந்திரன் என இரண்டுவிதமான கெட்டப்புகளில் முதலாளி தேங்காய் சீனிவாசனை ஏமாற்றும் காமெடி கேரக்டரில் நடிக்க சொல்லி இருக்கிறார்.

அதுவரை ரஜினி முழுநீள படத்திலும் காமெடி கேரக்டர் செய்யாததால், இப்படி நடித்தால் ரசிகர்கள் ஏற்பார்களா, என தயங்கினார். அவரை தைரியப்படுத்தி நடிக்க வைத்தார் இயக்குநர் கே பாலசந்தர். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரஜினி தன் குருநாதரை நினைத்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருக்கிறார்.
