அம்பானி வீட்டு திருமணத்தில் ஸ்டைலாக டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் வீடியோ..!!

By admin on ஆடி 12, 2024

Spread the love

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே உலகம் திரும்பி பார்க்கும் அளவிற்கு திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தான் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம்: மும்பையின் முக்கிய சாலைகளில்  போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்

   

இன்று ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சண்ட் திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. வருகிற 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதால் மும்பை நகரமே கலை கட்டியுள்ளது. மும்பையில் இருக்கும் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் பல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள், திரை துறையைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

   

Rajinikanth dancing along with Anil Kapoor at Anant Ambani wedding ceremony  viral video | Watch Video : னந்த் அம்பானி திருமணத்தில் டான்ஸ் ஆடிய  ரஜினிகாந்த்! வைரலாகும் வீடியோ

 

இந்த நிலையில் கோலிவுட் சினிமாவைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள் சௌந்தர்யா, மருமகன் பேரக்குழந்தையுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வெள்ளை நிற குர்தா மற்றும் வேஷ்டியில் ரஜினிகாந்த் கம்பீரமாக உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. திருமண நிகழ்ச்சியில் ஆடல் பாடல் என கொண்டாட்டங்கள் கலை கட்டியது.

அம்பானி இல்ல திருமண விழாவில் நடனமாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 

அப்போது அணில் கபூர் ஊக்குவிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். அங்கிருந்த அனைவரின் பார்வையும் ரஜினிகாந்த் மீது தான் இருந்தது. அவரது நடனத்தை அனைவரும் கொண்டாடியுள்ளனர். ரஜினிகாந்த் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் நடனத்திற்கு லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.