அம்பானி வீட்டு கல்யாணத்தில் மனைவியுடன் அட்லீ.. மனைவி பிரியாவின் உடைய ஹைலைட் பண்ணி காட்டிய அட்லி..

By Mahalakshmi on ஜூலை 12, 2024

Spread the love

அம்பானி வீடு திருமணத்திற்கு இயக்குனர் அட்லீ தனது மனைவியுடன் சென்றிருந்த நிலையில் பிரியா அட்லீயின் உடை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. முகேஷ் அம்பானி நீடா அம்பானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து இவருக்கு ஆகாஷ் அம்பானி ஆனந்த் அம்பானி என்று இரண்டு மகன்களும் ஈஷா அம்பானி என்ற மகளும் இருக்கின்றார்.

   

   

ஏற்கனவே ஆகாஷ் அம்பானிக்கும் ஈஷா அம்பானிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது ஆனந்த அம்பானிக்கு திருமணம் நடைபெற உள்ளது. இவர் பிரபல வைர வியாபாரியின் மகளான ராதிகா மெர்சண்டை திருமணம் செய்ய இருக்கின்றார். இன்று திருமண நிகழ்ச்சி இன்று மும்பையில் தொடங்கி 14ஆம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது. மூன்று நாள் திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு மும்பை மாநகரம் முழுவதும் விழா கோலம் கொண்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள்,  பிரபல தொழிலதிபர்கள் , திரை பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர். மாதங்களாக பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றது. ஹல்தி, சங்கீத் என பல நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் முகேஷ் அம்பானி காசை வாரி இறைத்து தனது மகனுக்கு கண்முன் தெரியாமல் செலவிட்டு வருகிறார் என்று கூறி வருகிறார்கள். மேலும் திருமணத்திற்கு மட்டும் 4000 முதல் 5000 கோடி வரை செலவாகி இருக்கின்றதாம். இந்நிலையில் இவரின் திருமண விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தில் உடன் வந்திருக்கின்றார். அதை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் திருமணத்திற்கு வருகை தந்திருக்கின்றார்.

இவர்கள் மட்டும் இல்லாமல் பாலிவுட்டை சேர்ந்த அனைத்து பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் டபிள்யூ டபிள்யூ மல்யுத்த வீரர் ஜான் சீனா, கன்னட நடிகர் யாஷ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் இந்த திருமணத்திற்கு வந்திருந்தார். அப்போது நடிகை பிரியா அணிந்திருந்த உடை அனைவரிடமே வரவேற்பை பெற்றுள்ளது. அந்த  உடையின் பின்பக்கத்தில் ஆனந்த் படை என எழுதப்பட்டிருந்தது .இதை பார்த்து ரசிகர்கள் பலரும் என்ன அம்பானி வீட்டு படை வீரர்களில் நீங்களும் ஒருவர்களா என்று கேலி செய்து வருகிறார்கள்.