அம்பானி வீட்டு திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் பட்டு வேட்டி சட்டையில் குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபரான வீரேல் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் இன்று ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் திருமண கொண்டாட்டங்கள் கலைக்கட்டி வருகின்றன.

மேளதாளங்கள், ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டத்துடன் திருமணம் களைகட்டி வருகின்றது. கடந்த மூன்று மாதங்களாக இவர்களின் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள், பெரிய பெரிய தொழிலதிபர்கள், நட்சத்திர பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து வந்தனர்.
இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் இன்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் இன்று நடைபெற உள்ள நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திரை பிரபலங்களான கிம் கர்தாஷியன், ஜாக்கி ஷெராஃப், ராஜ்குமார் ராவ், கியாரா அலி கான், அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூர், குஷி கபூர் என பல பிரபலங்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி மற்றும் இளைய மகள் சௌந்தர்யா கணவர் மற்றும் அவரது மகன்களுடன் தமிழ் பாரம்பரிய உடைகள் பங்கேற்று இருக்கின்றார்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் அட்லி அவரது மனைவி பிரியா உள்ள பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதை தொடர்ந்து கன்னட நடிகர் யாஷ், மல்யுத்த வீரர் ஜான் சீனா, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாவ், டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் தொடர்ந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த திருமண விழாவிற்கு கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
