பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த லாவண்யா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சிற்பிக்குள் முத்து என்ற சீரியலின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் லாவண்யா.
இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் திடீரென முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்த நடிகை சித்ரா உயிரிழந்ததை தொடர்ந்து காவியா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் அவர் அந்த சீரியலில் இருந்து விலக முல்லை கதாபாத்திரத்தில் லாவண்யா நடித்து வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்கு முன்பு சின்னத்திரையில் நடித்த அனுபவம் இருந்ததால் இந்த சீரியல் மூலமாக மிகப் பிரபலமானார். அதை தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்போது எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.
சமூகவலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது இவர் வெள்ளை நிற உடை இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.