Categories: சினிமா

‘வருஷத்துக்கு 100 இலவச திருமணங்களை நடத்தி வைப்பேன்’.. சொன்னதை செய்யாமல் ஏமாற்றினாரா ரஜினி..?

Spread the love

நடிகர் ரஜினிகாந்த், தமிழக மக்களின் அபரிமிதமான அன்பை பெற்றவர். அதனால் அவர் நடித்த படங்களை இப்போதும் வெற்றிப்படங்களாக ரசிகர்கள் மாற்றி வருகின்றனர். என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா, என்று பாடல் வரிகளுக்கு வாயசைத்த ரஜினி, இதுவரை தமிழக மக்களுக்காக என்ன செய்தார் என்று கேட்டால், தனிப்பட்ட முறையில் எதுவுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவராக, பொதுமக்களை சந்தித்து எந்தவிதமான உதவிகளையும் செய்ததில்லை. அதே நேரத்தில், சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன் என்ற பஞ்ச் டயலாக் பேசிய ரஜினி, 1989ல் சொன்னதையும் நிறைவேற்றாமல் ரசிகர்களை, தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், படங்களில் நடித்து வந்த பெரிய வருமானத்தை வைத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்தை சொந்தமாக கட்டினார். அந்த மண்டபத்தின் திறப்பு விழா, கடந்த 1989ம் ஆண்டில் நடந்தது. அப்போது பேசிய ரஜினி, தமிழக மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று நோக்கத்தில் தான் இந்த ராகவேந்திரா மண்டபத்தை கட்டியுள்ளேன். சென்னையில் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் இதுபோன்ற மண்டபங்களை கட்டுவேன். இதில் வரும் வருமானத்தை வைத்து ஆண்டுக்கு 100 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பேன் என்று பேசி இருக்கிறார்.

ஆனால் அப்படி எல்லாம் எந்தவிதமான இலவச திருமணத்தையும் ரஜினிகாந்த் நடித்து வைக்கவில்லை. ராகவேந்திரா திருமண மண்டப திறப்பு விழாவில் சொன்னது போல திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் ரஜினிகாந்த் திருமண மண்டபங்கள் எதுவும் கட்டவும் இல்லை. ராகவேந்திரா மண்டபத்தில் கூட இலவசமாக ஏழை மக்கள் திருமணம் செய்துக்கொள்ளவும் ரஜினி அனுமதி வழங்கவும் இல்லை. ஆனால் இவரது ரசிகராக உள்ள, தனது குரு ரஜினிதான் என கூறிவரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சக்சஸ் மீட்டில் பேசும் போது, நான் புதிதாக பெரிய திருமண மண்டபம் ஒன்றை கட்ட உள்ளேன். அதை ஏழை எளிய மக்கள் தங்களது திருமணங்களை இலவசமாக செய்துக்கொள்ளலாம். அங்கு மண்டபத்துக்கு வாடகை உள்ளிட்ட எந்தவிதமாக கட்டணங்களும் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்திருக்கிறார். 1989ல் ரஜினி பேசிய அந்த செய்தி அடங்கிய பேப்பர் கட்டிங் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

4 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

5 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

5 மணத்தியாலங்கள் ago