நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் படையப்பா படத்தில் அப்பா மகனாக நடித்திருப்பார்கள். ஆனால் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இவர்கள் இருவருக்கும் இடையே அப்பா மகன் பாசம் இருக்குமாம். ரஜினியும் சிவாஜி வீட்டில் அனைவரிடமும் பாசமாக பழகுவாராம். அப்படி உள்ள நிலையில் ஒருமுறை சிவாஜி கணேசன் ரஜினியை அழைத்து அவரது கடைசி ஆசையை கூறியுள்ளார். அதன்படி ஒருவேளை நான் இறந்து விட்டால் என் உடலுடன் மயானம் வரை வருவாயா என சிவாஜி கேட்டாராம்.
அதை கேட்ட உடன் அதிர்ச்சி அடைந்த ரஜினி ஏன் அப்பா இப்படியெல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு எதுவும் ஆகாது என கூறினாராம். ஆனால் சிவாஜியோ எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வயசாகிறது அல்லவா? நீயும் அமெரிக்கா இயமயமலை என எப்போது பார்த்தாலும் பிசியாகவே இருப்பாய். அதனால் என் இறுதி ஊர்வலத்தில் கூடவே வரவேண்டும் என சிவாஜி கேட்டு கொண்டாராம். அதன்படி சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் அவர் உடல் அருகே அமர்ந்து அவரை கொண்டு சென்ற வண்டியிலேயே ரஜினியும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை ரஜினியே கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக என் அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் கூட நான் பங்கேற்கவில்லை. ஆனால் சிவாஜி அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் இறுதி வரை அவருடன் சென்றேன் என ரஜினி கண்ணீர் மல்க கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.