‘மெட்டி ஒலி’ தனம் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா…? 10 வருடங்கள் கழித்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கலக்கிக் கொண்டிருந்தவர் நடிகை காவேரி. இவர் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்த ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து போக்கிரி தம்பி, சேதுபதி ஐ.பி.எஸ் மற்றும் நல்லதே நடக்கும் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். பின் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.

   

நடிகை காவேரி சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதனை தொடர்ந்து காவேரி, மீரா, தங்கம் மற்றும் வம்சம் ஆகிய தொடர்களில் நடித்தார். அதன் பிறகு இவர் 2013 ஆம் ஆண்டு ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூருக்கு சென்று விட்டார். அதன் பிறகு இவர் எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை.

தற்பொழுது  10 வருடம் கழித்து உடல்மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார் நடிகை காவேரி. தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘வம்சம் நடிச்சு முடிச்ச கையோடு அம்மா இறந்துட்டாங்க. அந்த டைமில் தான் எனக்கு கல்யாணம் ஆகி இருந்தது. இதனால் எனக்கு டிப்ரஸன் வந்துடுச்சு. அதனால் வீட்டுக்குள்ளயே இருந்தேன்.

நிறைய ஊரில் வாழ்ந்து வந்தோம். ஒரு வேலைக்காக ஒரு வாரத்துக்கு தான் சென்னை வந்தோம். ஆனால் என்னுடைய அண்ணன் இறந்துவிட்டார்.  எனக்கு தைராய்டு வந்துவிட்டது. அதனால் மாத்திரை சாப்பிட்டு வந்தேன். நிறைய வெயிட் போட்டேன். அதனால் மாத்திரையை ஒருகட்டத்தில் டக்குனு நிறுத்தினேன். உடனே 8 கிலோ வரை குறைந்துவிட்டது. என்னுடன் நடித்து இருந்த விஜி இறந்த விஷயம் கூட எனக்கு இரண்டு நாட்கள் கழிச்சு தான் தெரிந்தது. இந்த 10 வருடமும் வீட்டுக்குள் தான் அடைந்து இருந்தேன்’. என்று சோகத்துடன் பேட்டியளித்துள்ளார்.