Connect with us

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

CINEMA

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும் வகையிலேயே எடுக்கப்பட்டும் வருகிறது. இதில் முன்னிலையில்  இருப்பவை சன் டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சி சேனல்கள். இவற்றில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களுக்கு என ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

பல சீரியல்கள் 1000 எபிசோடுகளை கடந்தும் வருடக்கணக்கில் ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். ஆனால் ஒரு சில சீரியல்கள் சீக்கிரமாகவே முடிந்து விடும். அப்படி  இந்த வாரத்தோடு சன் டிவியின் ‘அன்பே வா’ சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

   

 

இதைத்தொடர்ந்து பல்வேறு புது சீரியல்களை களமிறக்க உள்ளது சன் டிவி. அன்பே வா சீரியல் முடிவடைவதையே ஒரு சில ரசிகர்களால் தாங்கி கொள்ள முடியாத நிலையில், மீண்டும் மற்றொரு சீரியலையும் முடிவுக்கு கொண்டு வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது சன் டிவி.

அதாவது சன் டிவியில் கிட்டத்தட்ட 600 எபிசோடுகள் நெருங்கி வரும் பிரியமான தோழி சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதாம். இந்த தகவல் அந்த தொடரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top