ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து ஒரே ஹிட் படம் இதுதான்.. ‘லால் சலாம்’ வரை தொடரும் துயரம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வர பைரவி படத்தில் கதாநாயகன் ஆனார். அதன் பின்னர் முரட்டுக் காளை திரைப்படம் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது.

அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருந்து வருகிறார். 72 வயதில் அவர் இப்போது தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

   

இந்நிலையில் கடந்த வாரம் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் ரிலீஸானது. ஆனால் இந்த படத்துக்கு சுத்தமாக வரவேற்புக் கிடைக்கவில்லை. ரஜினி படத்துக்குக் கிடைக்கும் ஓப்பனிங் கூட இல்லை என்பதுதான் சோகம்.

இந்நிலையில் இதுவரை ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த படங்களில் அன்புள்ள ரஜினிகாந்த் தவிர வேறு எந்த படங்களும் ஹிட்டாகவில்லை என்பது வருத்தத்துக்குரிய தகவலாக அமைந்துள்ளது.

1993 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் கதை எழுதி அவரே தயாரித்த திரைப்படம் வள்ளி. அந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திலும் அவர் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.

அதையடுத்து 2008 ஆம் ஆண்டு பாலச்சந்தர் தயாரிப்பில் ரஜினிகாந்த் குசேலன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்திலும் ரஜினி ஒரு நீண்ட கௌரவ வேடத்தில்தான் நடித்திருந்தார். சிவாஜியின் வெற்றிக்குப் பிறகு பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த படம் அட்டர் ப்ளாப் ஆக, ரஜினி விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தார்.

இந்நிலையில் இப்போது ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்திலும் அந்த சோகம் தொடர்ந்துள்ளது. இந்த படத்தில் மொகிதின் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்திருந்தார்.  மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படத்தில் ரஜினி நடித்திருந்தாலும் மோசமான திரைக்கதை காரணமாக இந்த படம் எடுபடவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த படங்கள் தவிர பல படங்களில் ரஜினி ஒரு சில காட்சிகளில் வருவது போல நடித்துள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் நாம் சிறப்புத் தோற்றம் என சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar