நெப்போலியன் அவர்கள் முதன் முதலில் 1991 ஆம் ஆண்டு வெளியான “புது நெல்லு புது நாத்து” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார், அப்பிடத்திலே அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது, அதன் பின்னர் புதுப்பேட்டை பொன்னுத்தாயி, மின்மினி பூச்சிகள், கேப்டன் மகள், சீவலப்பேரி பாண்டி, தேவர் மகன், போன்ற படங்களில் நடித்த மிகவும் பிரபலமானார், நெப்போலியன் என்றாலே கம்பீரமான நடை, உயரமான தோற்றம், துடைத்தெறியும் அளவு வேட்டி கட்டிய அந்தத் தோரணை தான் அவரை சினிமாவில் இவ்வளவு நாட்கள் நீடித்து வைத்திருந்தது, அவர் வேட்டி கட்டும் அழகிற்கு பல ரசிகர் கூட்டமே இருந்தது.
சினிமாக்கு வருவதற்கு முன்பாக துரைசாமி குமரேசன் இருந்த அவர் சினிமாவில் நெப்போலியன் ஆக அறிமுகபடுத்தப்பட்டார்.தற்போது நெப்போலியன் சினிமா மற்றும் அரசியல் துறையில் ஒதுங்கி, குடும்பத்துடன் அமெரிக்காவில் உலக அளவில் பிசினஸ் செய்து வருகிறார். இவர் எப்படி அமெரிக்காவில் போய் செட்டில் ஆனார் என எல்லோருக்குமே சந்தேகம் இருக்கலாம்.நடிகர் நெப்போலியன் கடந்த 2000ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்னும் ஐடி கம்பெனியை தொடங்கினார். ஐடி கம்பெனிகளுக்கு தேவையான தீர்வுகள் மற்றும் வேலை ஆட்களை கொடுப்பதுதான் இந்த ஜீவன் டெக்னாலஜிஸ் கம்பெனியின் வேலை.
ஜீவன் டெக்னாலஜி கம்பெனியில் வேலைக்கு சேர்பவர்களுக்கு ட்ரெய்னிங்கும் கொடுக்கப்பட்டு நல்ல ஐடி கம்பெனியில் வேலையும் பார்த்து கொடுக்கப்படுகிறது. மயிலாப்பூரில் ஆரம்பித்த இந்த தொழில் இப்போது உலகம் முழுக்க இருக்கும் ஐடி கம்பெனிகளில் முக்கியமான நிறுவனமாக மாறும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. தற்போது ஜீவன் டெக்னாலஜிஸ் கம்பெனியின் ஹெட் குவாட்டர்ஸ் அமெரிக்காவில் தான் இருக்கிறது.
நெப்போலியன் தன் குடும்பத்தோடு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.அவருடைய மகனுக்கு தசை வளர்ச்சி குறைபாடு இருப்பதால் அதேபோன்று குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உதவும் வகையில் ஜீவன் அறக்கட்டளை நிறுவனமும் நடத்தி வருகிறார். தன் மகனின் மருத்துவ சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல இது ஒரு காரணமாக அமைந்தது.