ஸ்ரீலங்காவில் உள்ள ஓபன் ஸ்டேடியத்தில் நடந்த இசை நிகழ்ச்சியல் தமன்னா அவர்களால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.2005 இல் ரிலீசான தெலுங்கு படமான “சான்ஸ் ரோஷன் சாத்ரா” படம் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். சுறா, ஸ்கெட்ச், வீரம், பையா, அயன், சிறுத்தை, போன்ற முன்னணி படங்களில் நடித்த பிரபலமானவர் இவர், சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் “வா காவாலா” சாங் இருக்கு நடனமாடி மீண்டும் ரசிகர் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளார். இப்பாடல் மிகவும் பிரபலமான பின் இவர் பல கலை நிகழ்ச்சியில் விருந்தினராக அழைக்க ஆரம்பித்தார்கள். அதில்
2000 காலகட்டத்தில் தொடை அழகியாக வலம் வந்த ரம்பா அவர்களின் கணவரான இந்திரகுமார் பத்மநாதன் அவர்கள் ஸ்ரீலங்காவில் உள்ள யாழ்பாணத்தில் ஓபன் ஸ்டேடியத்தில் இசையமைப்பாளர் ஹரிஹரனை வைத்து கலை நிகழ்ச்சி நடத்தினார், அதில் ரெட்டில்ஸ் கிங்கிலி, யோகி பாபு, தமன்னா ஆகிய பல பிரபலங்கள் இணைந்துள்ளார்கள், தமன்னா அவர்களை நடனம் ஆட சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.இந்திரகுமார் அவர்கள் இந்த கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக பெருமளவில் டிக்கெட் கலை விலை உயர்த்தி விற்று உள்ளார்.
முன்பக்கத்தில் அமர்வர்களுக்கு 30,000 அதற்குப் பின் 7000 அதற்கும் பின் அமர்பவர்களுக்கு 3000 என்று பல மடங்கு காசுகளை வசூலித்துள்ளார். தமன்னாவுடன் தனிப்பட்ட போட்டோ எடுப்பதற்கு அதிகமாக காசுகளை வசூலித்து உள்ளார். அதுமட்டுமின்றி விலை இல்லா டிக்கெட்களையும் கொடுத்து ரசிகர்களை பெருமளவில் இசைக்குழுவிற்கு அழைத்திருக்கிறார், இவ்வளவு பெரிய கூட்டத்தை அடக்குவதற்கு வெறும் 200 காவல்துறையினரை மட்டும் வைத்திருந்ததால் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பெரும் சலசலப்பாக ஆகியிருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஒழுங்கான அணுகுமுறை இசை நிகழ்ச்சி குழு தரவில்லையாம், பெருமளவு ரசிகர்கள் அனைவரும் தமன்னா அவர்களை பார்ப்பதற்காக தான் வந்துள்ளார்கள், 30,000 காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தமன்னா அவர்களைப் பார்ப்பதற்காக காத்திருந்த ரசிகர் கூட்டங்களுக்கு தமன்னா மேடையில் வந்து கையை மட்டும் காட்டி விட்டு சென்று விட்டாராம்.
இதை கண்ட ரசிகர்கள் கையாற்றுவதை பார்ப்பதற்காகவா இவ்வளவு காசு கொடுத்து இங்கு வந்துள்ளோம் என்று கோபத்திற்கு உள்ளானார்கள், தமன்னா அவர்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்தபோது அவர்களை சுற்றி பத்திரிகையாளர்கள் சூழ்ந்து பேச முனைந்த போது அவர் சரியாக பதிலளிக்காமல் பத்திரிகையாளர்களை பார்த்து அலட்சியமாக கைய அசைத்து விட்டு சென்று விட்டாராம், இசை நிகழ்ச்சியில் இவரை காண வந்த பெரும் ரசிகர் கூட்டத்தையும் அலட்சியமாக கையாண்டு உள்ளாராம், இதனால் தமன்னா மீது ரசிகர்கள் அனைவரும் பெரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.