தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ‘ கண்டநாள் முதல்’ படத்தில் சின்ன ரோலில் நடித்து, தமிழ் சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கினார். தன்னுடைய குரல் வளத்தால் பின்னணி பாடகியாக கலக்கி வந்தார்.
இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு”, தரமணி, விஸ்வரூபன் இரண்டு பாகங்கள், வடசென்னை என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டி சென்றார்.
இதையடுத்து, ஹாரர் மூவியை தேர்ந்தெடுத்து வரும் ஆண்ட்ரியா, இணையத்தில் அவ்வப்போது பரப்பை ஏற்படுத்தும் செய்திகளை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.சமீபத்தில் புஸ்பா படத்தின் ஓ சொல்றிய மாமா பாட்டின் தமிழ் வரிகளுக்கு இவர் பாடி இருந்தது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சினிமாவில் வெற்றி நாயகியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவருக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் துவக்க விழாவில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம், விஜய் அரசியல் குறித்து கேட்கப்பட்ட போது, ‘அதைப்பத்தி என்னால ஒன்னும் சொல்ல முடியாது’ என்று கூறினார். பின்னர் நீங்க ஏன் கடந்த 2 வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை? நடிக்குறத விட்டுடீங்களா? என கேள்வி கேட்கப்பட்ட போது, ‘ அதைப்பத்தி உங்களுக்கு என்ன கவலை’ என்றும் நக்கலாக பதிலளித்துள்ளார். இதோ அந்த வீடியோ…