Connect with us
Actor Rajinikanth

CINEMA

கமல் நடித்த இந்தியன் 2 படத்துக்கு, ரஜினி முன்வந்து செய்கிற இந்த விஷயம் – ரசிகர்களுக்கு இப்படியும் ஒரு ‘ஷாக்’

இன்று விஜய், அஜீத் எப்படியோ அப்படித்தான் ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமல் இருவரது ரசிகர்களும் இருந்தார்கள். ஆனால், ரசிகர்கள் தான் இப்படி இரண்டுபட்டு இருந்தார்களே தவிர, ரஜினியும் கமலும் உடன்பிறவாத இரு சகோதரர்கள் போலவும், பால்ய கால நண்பர்கள் போலவும் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். அவர்களது நட்பு, இதுவரை எந்த இரண்டு நடிகர்களிடமும் காண முடியாத, இரும்பு போன்ற உறுதியான நட்பாக இருக்கிறது. Actor Rajinikanthஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி – கமல் இருவரும் சேர்த்து நடித்த நிலையில், ஒரு கட்டத்துக்கு பிறகு இருவரும் இனி தனித்தனியாக பயணிப்போம் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஏனெனில், இருவரும் தனித்தனியாக வளர வேண்டும் என்றால், இருவரும் இனி ஒன்றாக நடிக்கக் கூடாது என முடிவெடுத்தனர். லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ரஜினியை, இனிமேல் நீங்கள் படத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள் என தைரியப்படுத்தி, கேக்க வைத்தவரே கமல்ஹாசன்தான். Actor Rajinikanthஅப்படிப்பட்ட கமல்ஹாசன் என்கிற தன் நெருங்கிய நண்பருக்கான, இந்தியன் 2 படத்தின் அறிமுகத்தை, நாளை மாலை 5.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்ட்ரோ செய்கிறார். இந்தியன் 2 அறிமுக நிகழ்ச்சியை ரஜினி செய்கிறார் என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் போஸ்டர் மூலம் டிவிட்டரில் பதிவிட்டு தகவலை வெளியிட்டுள்ளது.

தன் நண்பர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை அறிமுகப்படுத்த, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்வருகிறார் என்றால், இதை விட சினிமாவுலகில் சிறந்த நட்புக்கான அடையாளத்தை காண முடியாது. இந்தியன் 2 படத்தை ரஜினி அறிமுகப்படுத்துவதால், அவர் ஷங்கர் டைரக்சன் என்பதால் இந்த படத்தில் ரஜினி நடித்திருக்கலாம் எனவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

   
author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top