Connect with us

CINEMA

Biggboss season 7… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தானா…?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.  ஆக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 33 நாட்களை கடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

 

   

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா என 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் உள்ள மொத்தம் 15 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் கடந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்திரன் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினர். இவர்களை தொடர்ந்து  தினேஷ், வி.ஜே. அர்ச்சனா, கானா பாலா, அன்ன பாரதி மற்றும் ஆர்.ஜே. பிராவோ என 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி உள்ளனர்.

இவர்களை வைச்சு செய்து வருகின்றனர் பிக் பாஸ் ஹவுஸ்மாட்ஸ். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் குறித்த தக்வல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வார எலிமினேஷனுக்கு  வி.ஜே.அர்ச்சனா, தினேஷ் கோபால்சாமி, கானா பாலா, அக்‌ஷயா உதய்குமார், மணிச்சந்திரா, மாயா கிருஷ்ணன், ஐஷு, அன்ன பாரதி மற்றும் ஆர்.ஜே.பிராவோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் விஜே அர்ச்சனா அதிகபட்ச வாக்குகளை பெற்று முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. குறைவான வாக்குகள் பெற்று கடைசி நான்கு இடங்களை அன்ன பாரதி, ஐஷு, அக்‌ஷயா உதயகுமார், மாயா பிடித்திருப்பதாகவும், இவர்களில் மாயா மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று இந்த வாரம் வெளியேற்றப்படுவார் எனவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்பதை. நீங்க இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் போன நல்லாயிருக்கும்னு நெனைக்குறீங்கன்னு கமெண்ட்- ல சொல்லுங்க.

Continue Reading

More in CINEMA

To Top