அவமானப்படுத்தப்பட்டாரா ரஜினி..? உண்மையில் நடந்தே வேற.. அவர்களுடன் அமர்ந்து அங்கேயும் மாஸ் கட்டிய தலைவர்..

By Sumathi

Updated on:

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 22ம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதன்மை விருந்தினராக பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உலக கோடீஸ்வர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி போன்ற மிகப்பெரிய தொழிலதிபர்கள், ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர்கள்,

அமிதாப் பச்சன், ரன்வீர் கபூர், ஷாருக்கான், மாதுரி தீக்‌ஷித், சச்சின் டெண்டுல்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் என ஏராளமான விவிஐபி கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர். இந்த விழாவை கொண்டாடும் விதமாக, பல மாநிலங்களில் அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது.

   

பெருமை மிகு இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், அவரது சகோதரர் சத்யநாராயணா கெய்ட்வாட் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ரஜினிக்கு முதல் வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரது மனைவி, சகோதரர் ஆகியோருக்கு வேறு ஒரு இடத்தில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

குடும்பத்துடன் ராமரை தரிசிக்க வந்த இடத்தில் இப்படி தனிமைப்படுத்தபட்டதாக கருதிய ரஜினிகாந்த் அங்கிருந்த ஒரு விழா ஏற்பாட்டாளரை அழைத்து, தன் மனைவி, அண்ணனை அமர வைக்குமாறு கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாகவும் சோஷியல் மீடியாவில் அந்த வீடியோ காட்சி வைரலானது. ரஜினி அவமானப்படுத்தப்பட்டாரா என்ற சர்ச்சையும் எழுந்தது.

இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் கூறியதாவது, ராமர் கோவில் விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த விதத்திலும் அவமானப்படுத்தப்படவில்லை. அவருக்கு முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களுக்கு அளிக்கப்பட்ட அதே முன்வரிசையில், விவிஐபி சீட்டுதான் ஒதுக்கப்பட்டு, அங்குதான் அமர்ந்திருந்தார். அவர், விழா ஏற்பாட்டாளரிடம் வேறு ஏதோ ஒரு விஷயம் குறித்த கேட்கிறார். அதற்கு அவர் பதில் அளிக்கிறார்.

இதுதான் அந்த வீடியோ காட்சியாக உள்ளது. அதை, ரஜினிக்கு அயோத்தியில் சீட் கிடைக்கவில்லையா எனவும், ரஜினிக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாகவும் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். உண்மையில், பாலிவுட்டில் வடமாநிலங்களில் கருப்பு நிறத்தை உதாசீனப்படுத்தி ஒதுக்கிய காலமும் உண்டு. ஆனால் அதை வென்று தள்ளி, தன்னை வரவேற்று கொண்டாடும் ஒரு நிலையை பாலிவுட்டில், வடமாநிலங்களில் உருவாக்கி நடிகராக வெற்றி பெற்றவர் ரஜினிகாந்த் என்று, செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi