இன்னும் ரிலீசே ஆகல அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா?.. அட்வான்ஸ் புக்கிங்கில் கலக்கும் ரஜினியின் வேட்டையன்..!

By Nanthini on ஐப்பசி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தொலைத்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நிலையில் அடுத்த பட இயக்குனர் குறித்த ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பொதுவாகவே ரஜினிக்கு வருடத்திற்கு ஒரு படம் நடிப்பது தான் வழக்கம். ஆனால் கடந்த வருடம் அவருடைய நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அந்த படம் பக்கா கமர்சியல் ஹிட் ஆக மாறிவிட்டது. இதனால் ரஜினியின் மிகவும் சுறுசுறுப்பாக மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கி விட்டார். இதனால் இந்த வருடத்தில் மட்டுமே ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு மற்றொரு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார்.

   

இந்நிலையில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். லைகா ப்ரோடுக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார்.

   

 

கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் வேட்டையன் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ஓபன் ஆகி விட்டது. வெளிநாடுகளிலேயே பட்டையை கிளப்பி வந்த வேட்டையன் தற்போது உலக அளவில் அனைத்து இடங்களிலும் அட்வான்ஸ் புக்கிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறது. வேட்டையன் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இதுவரை உலக அளவில் அட்வான்ஸ் புக் இந்தியன் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனால் முதல் நாளே வேட்டையன் திரைப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.