ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கனா, எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வசனம் எழுதிய வருமான தமிழரசன் பச்சமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் பிரபலங்கள் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. தன்னுடைய முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திரையரங்குகளில் 15 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் 30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் கதாநாயகிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் குறிப்பாக மலையாள நடிகை ஸ்வாதிகாவுக்கு ஒரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இவர் முதன் முதலில் வைகை என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருடைய கணவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் சொன்ன விஷயம் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதாவது சினிமா விளம்பர படப்பிடிப்புக்கு கிளம்பும்போது எப்போதும் என் காலில் விழுந்து வணங்கி விட்டு தான் செல்வார். அதனைப் போலத்தான் நானும். என் மனைவி காலை தொட்டு தினமும் நான் வணங்குவேன். அது மட்டுமல்லாமல் நான் சாப்பிட்ட பிறகு அதே தட்டில் தான் அவரும் சாப்பிடுவார். ஒருவேளை நான் சாப்பிட்ட தட்டில் கை கழுவி விட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும். என் மனைவிக்கு பாரம்பரிய கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். அதனை இன்றும் பின்பற்றி வருகிறார். அதில் அவருக்கு தனி ஒரு சந்தோஷம் என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ள நிலையில் இது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
