நீயா, நானா..? போட்டி போட்டு ஆயுத பூஜைக்கு புது படங்களை ஒளிபரப்பும் விஜய் டிவி, சன் டிவி..!!

By admin on ஐப்பசி 9, 2024

Spread the love

வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து ஆயுத பூஜை விடுமுறை வருகிறது. நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டை என் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. பொதுவாக விடுமுறை என்றால் அனைவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து டிவி பார்ப்பார்கள்.

   

எனவே டிஆர்பிஐ அதிகரிக்கும் நோக்கத்தோடு டிவி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது நிகழ்ச்சியையும் படங்களையும் களமிறக்குவார்கள். அதிலும் விஜய் டிவி சன் டிவி சேனல்கள் மக்களிடையே பிரபலமானது. சன் டிவியில் அக்டோபர் 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

   

 

 

அதன்பிறகு மதியம் மூன்று மணிக்கு அஜித்தின் வீரம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. பின்னர் 6.30 மணிக்கு பிகில் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இந்த படங்கள் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பானது. ஆனாலும் ரசிகர்கள் விரும்பி பார்க்கத்தான் செய்கிறார்கள்.

விஜய் டிவி காலை 11 மணிக்கு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்கிறது. அடுத்ததாக மதியம் 2.30 மணிக்கு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ரிலீசான பார்க்கிங் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அடுத்ததாக மாலை 5.30 மணிக்கு சுந்தர் சி யின் இயக்கம் மற்றும் நடிப்பில் ரிலீசான அரண்மனை 4 திரைப்படத்தை ஒளிபரப்பு செய்கின்றனர்.