Connect with us

CINEMA

இந்த படம் ஓடவே ஓடாது, காமெடி நடிகர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய படத்தில் நடித்த ரஜினி… ரிலீசாகி சூப்பர் ஹிட்டான அந்த படம் எது தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் பல ஹிட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த 1980 – 90களின் காலகட்டம் அது. அப்போது நடிகராக இல்லாமல் திரைப்பட இயக்குநராக இருந்தவர் ஆர். சுந்தர்ராஜன். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர். இயக்குநராக இருந்த மணிவண்ணன் போன்றவர்கள் காமெடி நடிகர்களாக மாறியது போல, ஒரு கட்டத்தில் ஆர். சுந்தர்ராஜனும் காமெடி நடிகராக மாறினார். பல படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார்.

   

பல ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டு இயக்குநராக ஆர் சுந்தர்ராஜன் இருந்த அந்த சூழலில், ரஜினிகாந்தை ஹீரோவாக வைத்து படம் எடுக்க கால்ஷீட் வாங்கியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்ராஜன். அந்த படத்தின் கதையை கேட்ட ரஜினிக்கு, இந்த படம் நிச்சயமாக ஓடவே ஓடாது. எனினும் கால்ஷீட் கொடுத்து விட்டோம். நடித்துவிடலாம் என்றுதான் ரஜினி நடித்திருக்கிறார்.

அந்த படத்தில் 2 ரஜினிகளில் ஒருவர் அப்பாவி. ஒருவர் பணக்காரர். தன் தந்தையை கொன்றவர்களை கண்டுபிடிக்க வரும் ரஜினியை, ஒரு கட்டத்தில் அந்த வில்லன் குரூப், ஜெயிலுக்கு அனுப்புகிறது. ஜெயிலில் இருந்து தப்பிக்கும் பணக்கார ரஜினி, அப்பாவி ரஜினியை தனக்கு பதிலாக ஜெயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வில்லன்களின் சதித்திட்டத்தை கண்டுபிடித்து ஆதாரத்துடன் சட்டத்தின் முன் நிரூபிப்பதுதான் படத்தின் கதை.

இப்போதைய கமர்ஷியல் படங்களை போலவே, அப்போதும் இதுபோன்ற பாட்டி வடை சுட்ட கதைகளில்தான் பெரிய ஹீரோக்கள் நடித்தார்கள். இந்த படங்களை எடுத்த இயக்குநர்களை தான் பெரிய இயக்குநர்கள் என்று கொண்டாடினார்கள். அப்போது படங்களை தூக்கிப் பிடித்தது படத்தில் இடம்பெற்ற பாடல்கள், இசை, குறிப்பாக காமெடி காட்சிகள் மட்டுமே.

மற்றபடி கதை, திரைக்கதை என்று பார்த்தால் 3ம் வகுப்பு மாணவன் கூட எளிதாக புரிந்துக்கொள்ளும், சொல்லிவிடும் மிக எளிதான கதைதான். ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய ராஜாதி ராஜா படத்தை தான், இந்த படம் கண்டிப்பாக ஓடவே ஓடாது என கூறியவர் ரஜினிகாந்த். ஆனால், அந்த காலகட்டத்தில் முதல் நாளிலேயே 90 லட்சம் ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. அடடா, இப்படி ஒரு வெற்றிப் படம் தந்த இயக்குநரை பற்றி தவறாக நினைத்து விட்டோமே என ரஜினி வருத்தப்பட்டு இருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top