என்னை அனைத்த கை, எத்தனை முறை அடித்தாலும் பொறுத்துக் கொள்வேன்… மனோரமா பற்றி ரஜினி பகிர்ந்த எமோஷனல் சம்பவம்!

By vinoth on புரட்டாதி 3, 2024

Spread the love

இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையைப் படைத்தவர் ஆச்சி மனோரமா. 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரின் திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.

தமிழகத்தின் ஐந்து முதல்வர்களோடு இணைந்து நடித்திருந்தாலும் மனோரமா தன்னை எந்த அரசியல் கட்சியுடனும் இணைத்துக் கொள்ளவில்லை. எல்லோருக்கும் பொதுவானவராகவே தன்னைக் காட்டிக்கொண்டார். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் மனோரமா, அரசியல் காரணமாக ஒரு நடிகரை தாக்கிப் பேசியுள்ளார். அதுவும் யாரைத் தெரியுமா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைதான்.

   

அப்போது ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் இடையே அரசியல் மோதல் தீவிரமாக இருந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ரஜினியைக் கடுமையாக விமர்சித்தார் மனோரமா. இதனால் அவரை யாருமே தங்கள் படத்தில் நடிக்க வைக்கவில்லை. ஆனால் ஆறு மாதம் கழித்து தன்னுடைய படமான அருணாச்சலம் படத்தில் மனோரமாவுக்கு நல்ல வேடம் கொடுத்து கௌரவித்தார் அருணாச்சலம்.

   

அதன் பின்னர் மனோரமாவின் பொன் விழா ஆண்டு நடந்தபோது அதில் கலந்துகொண்டார் ரஜினி. அப்போது மனோரமா பற்றி பேசும்போது, “நான் பில்லா படத்தில் மனோரம அம்மாவோடு நடித்தேன். அப்போது நான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பியிருந்த காலம். அங்கு ஷூட்டிங் பார்க்க வந்த சில வக்கிர புத்திக் கொண்டவர்கள் என்னைப் பார்த்து ‘பைத்தியம் பைத்தியம்’ எனக் கத்தினார்கள்.

 

அப்போது எனக்காக அவர்களிடம் சண்டை போட்டவர் மனோரமா அம்மாதான். அப்போது என்னை அனைத்த இந்த கை, எத்தனை முறை என்னை அடித்தாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்” என தனக்கும் அவருக்கும் இடையிலான உறவு பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்.