நீண்ட நாள் கனவு.. BMW கார் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

By Nanthini on புரட்டாதி 3, 2024

Spread the love

இயக்குனர் ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தவர் தான் பொன்ராம். இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்து வெளியான முதல் படம் தோஸ்த். அடுத்து இவர் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, மற்றும் சத்யராஜ் என மிகப் பெரிய பட்டாளமே நடித்திருந்தது. வெறும் ஏழு கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 77.5 கோடியை பாக்ஸ் ஆபிஸ் வசூலாக பெற்று பெரிய சாதனை படைத்தது.

   

குறிப்பாக ஊதா கலரு ரிப்பன் பாட்டு பட்டி தொட்டி எல்லாம் பரவலானது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி இணைந்தது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் திரைப்படம் வெளியானது. உறவுகளின் தேவையையும் அவசியத்தையும் தனக்கே உரிய பாணியில் சொன்னார் பொன்ராம். இந்த திரைப்படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த வசனகர்த்தா என்று அவர் நிரூபித்துக் காட்டினார்.

   

 

மேலும் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் இவர் இணை இயக்குனராக பணியாற்றினார். பிறகு சீம ராஜா படத்தை இவர் இயக்கியிருந்தார். இப்படி தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான கதைக்களத்துடன் திரைப்படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து விட்டார்.

அடுத்ததாக இவர் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் வைத்து திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் பொன்ராம் தற்போது தனது நீண்ட நாள் ஆசையான பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார். அதில் உள்ள வசதிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

BMW KUN Exclusive இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bmwkunexclusive)