CINEMA
G.O.A.T படத்தில் விஜய்க்கு 200 கோடி, ஆனா பிரசாந்துக்கு சம்பளம் இவ்வளவு தானா?.. வெளியான தகவல்..!
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் பிரசாந்த். இவருடைய தந்தை தியாகராஜன் சினிமாவில் இருந்தாலும் முறையாக பல கலைகளை பயின்றுவிட்டு தான் சினிமாவிற்கு வந்தார் பிரசாந்த். இவர் முதலில் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையும் அவர் மீது திரும்பியது. அந்த சின்ன வயதில் அவ்வளவு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த திறமையானவர் என நிரூபித்தார் பிரசாந்த்.
அதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் 90களில் விஜய் மற்றும் அஜித்தை விடவும் டாப்பில் இருந்தார் பிரசாந்த். ஆக்சன் மற்றும் ரொமாண்டிக் என அனைத்திலும் கலக்கினார். தெலுங்கு சினிமாவிலும் சப்போர்ட் ரோல் செய்தார். கடந்த மாதம் இவருடைய நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே இளைய தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள கோட் திரைப்படத்தில் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதில் பிரசாந்த் படம் முழுக்க வருவார் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது புரிகிறது.
இந்த நிலையில் கோட் திரைப்படத்திற்கு பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கோட் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரஷாந்த் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு தரப்பட்ட சம்பளம் 200 என்பது குறிப்பிடத்தக்கது.