Connect with us

என் கணவர் இறந்தததுக்கு சிவாஜி கூட வரல… சினிமாவுல இதெல்லாம் சாதாரணம்தான்… நடிகரின் மனைவி ஆதங்கம்!

CINEMA

என் கணவர் இறந்தததுக்கு சிவாஜி கூட வரல… சினிமாவுல இதெல்லாம் சாதாரணம்தான்… நடிகரின் மனைவி ஆதங்கம்!

நடிகர் சுருளிராஜன், தமிழ் சினிமாவில் 1970, 80 களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் இவரது கஞ்சத்தனம் கேரக்டர் வெகுகாலம் ரசிகர்களால் சிலாகித்து ரசித்து பேசப்பட்டது. மகா கஞ்சனாக அவர் அதில் நடித்திருப்பார். ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை மற்றும் ஜானி உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தது. இதனால் ஒரே ஆண்டில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியான நடிகரானார்.

சுருளிராஜன், நீண்ட காலம் இருந்து நிறைய படங்களில் நடித்து பேரும் புகழும் அடைய வேண்டியவர். ஆனால், இளம் வயதில் அதாவது 42 வயதிலேயே சுருளிராஜன் இறந்து போனார். அதற்கு முக்கிய காரணம், அவரது மதுப்பழக்கம். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அவரது கால்ஷீட் வேண்டும் என்றால், வெளிநாட்டு மதுபானம் வாங்கிக் கொடுத்தால், உடனே நடிக்க ஒத்துக்கொள்வார்.

   

இந்நிலையில் அவர் இறந்து 40 ஆண்டுகள் கழித்து அவரின் மனைவியான முத்துலட்சுமி தற்போது அவரின் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்துப் பேசியுள்ளார். அதில் “அவருக்கு அல்சர் இருந்தது. அதனால் சூடான உணவுகளை எப்போதும் எடுத்துக் கொள்ள மாட்டார். குளிர்ச்சியான உணவுகளையே எப்போதும் எடுத்துக் கொள்வார். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அப்போதுதான் அவருக்கு மூலம் இருப்பதே தெரியவந்தது. ஆனால் பத்திரிக்கைகளில் அவர் குடிப்பழக்கத்தால் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.

   

அவருக்காக எம் ஜி ஆர் சிங்கப்பூரில் இருந்து மருந்து ஏற்பாடு செய்து வரவழைத்தார். ஆனால் அந்த மருந்து ஏறிக்கொண்டிருக்கும்  போதே அவருக்கு உயிர் போய்விட்டது. அவர் சாவுக்கு யாருமே சினிமாவில் இருந்து வரவில்லை.அதுதான் வருத்தமாக இருந்தது. ஆனால் அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து வந்து ஒரு தயாரிப்பாளர் உங்க கணவருக்கு நான் சம்பளம் கொடுக்க வேண்டி இருந்தது என சொல்லி பணம் கொடுத்துவிட்டுப் போனார்” எனக் கூறியுள்ளார்.

 

More in CINEMA

To Top