Categories: சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த நடிகரை கட்டிப்பிடித்த ரம்பா.. கோபத்தில் ரஜினி செய்த செயல்.. பலவருட அனுபவத்தை சொன்ன ரம்பா..

Spread the love

சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா நடித்த படம் அருணாச்சலம். 30 நாளில் 30 கோடி ரூபாயை செலவு செய்ய வேண்டும் என்ற வித்யாசமான கதைக்கரு. இந்த படத்தில், விசுவின் மகளாக ரம்பா, ரஜினிக்கு செகரட்டரியாக நடித்திருப்பார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் அருணாச்சலம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரம்பா கூறியதாவது, ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது பலரது கனவு. அந்த ஆசை எனக்கும் இருந்தது. சுந்தர் சி போனில் அழைத்து, அருணாச்சலம் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறி வாய்ப்பளித்தார். பெரிய சந்தோஷமாக இருந்தது.

ஐதராபாத்தில் அருணாச்சலம் ஷூட்டிங் நடந்த போது, பக்கத்தில் சல்மான்கான், ஜாக்கி செராப் நடித்த பந்தணன் என்ற இந்தி பட ஷூட்டிங் நடந்தது. அதில் நான் ஜாக்கி செராப்புக்கு தங்கையாகவும், சல்மான்கானுக்கு காதலியாகவும் நடித்தேன். காலையில் ரஜினி படத்திலும், மதியத்துக்கு பிறகு சல்மான்கான் படத்திலும் நடிப்பேன். ரஜினி ஷூட்டிங் பக்கத்து ஷெட்டில் நடப்பதை அறிந்து, சீனியர் நடிகர் என்ற மரியாதை நிமித்தமாக சல்மான்கான், ஜாக்கி செராப் அவரை பார்க்க வந்தனர். அப்போது அங்கிருந்த நான் ஓடிச்சென்று, சல்மான்கான், ஜாக்கி செராப்பை கட்டிப்பிடித்து வரவேற்றேன். ஏனெனில் அதுதான் பாலிவுட்டில் பழக்கம். அது பெரிய நடிகர்களை பார்க்கும்போது மரியாதையாக செய்யும் ஒரு விஷயம்.

அவர்கள் ரஜினியை சந்தித்து பேசிவிட்டு போன பிறகு ரஜினி சார் கோபமாக இருந்தார். கழுத்தில் கட்டியிருந்த துண்டை கழட்டி வீசிவிட்டு சுந்தர் சியிடம் கோபமாக ஏதோ பேசினார். ரம்பாவுடன் இனி நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் போல தெரிந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கிருந்த பலரும் என்னையே திரும்பி திரும்பி பார்த்தனர். அங்கிருந்த கேமராமேன் வந்து, ரஜினி சார் கோவிச்சுக்கிட்டார், ஏன் மேடம் இப்படி பண்ணுனீங்க என கேட்க, எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் அழுவதை பார்த்து அங்கு ஓடோடி வந்த ரஜினி என்னை சமாதானப்படுத்தினார்.

பின்னர் காலையில் என்ன நடந்தது என அங்கிருந்தவர்களிடம் கேட்டார். அவர்கள் சல்மான்கான் வந்தபோது நான் கட்டிப்பிடித்ததை சொல்ல, இந்தி நடிகர்கள் வந்தா மட்டும் கட்டிப்பிடிச்சு வரவேற்பீங்க, நாங்க தமிழ் நடிகர்கள்னா, சும்மா வணக்கம் சொல்லி போயிடுவீங்க, தள்ளிப்போய் உட்கார்ந்து புக் படிப்பீங்க, ஆனா எங்களை கண்டுக்க மாட்டீங்க, நாளையில இருந்து ஷூட்டிங் செட்டுக்குள்ள வந்தா எல்லாரையும் வரிசையா நிற்க வைப்பேன். நானும் நிற்பேன். எல்லோரையும் கட்டிப்பிடிக்கணும் என கலாட்டா செய்துவிட்டார், என கூறியிருக்கிறார் ரம்பா.

admin

Recent Posts

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

4 minutes ago

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

11 minutes ago

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

26 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

30 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

36 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

39 minutes ago