Categories: சினிமா

2023-இல் கவனம் ஈர்த்த டாப் 10 இயக்குனர்கள்.. ‘போர் தொழில்’ மூலம் மக்களிடம் ரீச் ஆன விக்னேஷ் ராஜா..

Spread the love

ஆண்டு ஆண்டாக சினிமாவில் அறிமுக இயக்குநர்களின் வருகை அதிகரித்து வருகிறது. பல அறிமுக இயக்குநர்கள் எடுக்கக்கூடிய படங்கள் எதிர்பார்த்ததை விட சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும். அப்படி 2023-ல் அறிமுக இயக்குநர்களாக இருந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்கள் மற்றும் அவர்களின் படங்கள் குறித்து பார்க்கலாம்.

1. கணேஷ்பாபு :

கவின், அபர்ணா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி வெளியான படம் டாடா. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரும், நடிகர் கவினின் கல்லூரி கால நண்பருமான கணேஷ் பாபு இயக்கி இருந்தார். எப்போதும் கணவன் விட்டு சென்ற பிறகு மனைவி குழந்தைகளை வளர்க்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையே தமிழ் சினிமா எடுத்துக்கொண்டிருந்த வேளையில், அதனை மாற்றி தன்னை விட்டு சென்ற மனைவியை விடுத்து மகனை தனி ஆளாக வளர்க்கும் தந்தையின் கதையையும், இறுதியில் இந்த குடும்பம் எப்படி ஒன்றினைகிறது என்பதையும் உணர்வுபூர்வமாக காட்டியது டாடா படம்.

#image_title

2. மந்திரமூர்த்தி :

சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மார்ச் மாதம் 3-ம் தேதி வெளியான திரைப்படம் அயோத்தி. வட இந்தியாவில் இருந்து சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவி இறந்து போக, அவரது உடலை அரசு விதிகளை கடந்து சொந்த ஊருக்கு எடுத்து செல்ல ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரான சசிகுமார் எவ்வாறு உதவுகிறார் என்பதை விளக்கிய இப்படம் உணர்வு ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

3. விநாயக் சந்திரசேகரன் :

சாதாரண மனிதர்களுக்கு இருக்கக் கூடிய குறட்டையை மையமாக வைத்து, அது எப்படி ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பது குறித்து இப்படம் விளக்கியிருக்கிறது. மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த மே மாதம் 12-ம் தேதி வெளியானது குட்நைட் திரைப்படம். ஃபீல் குட் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

#image_title

4. விக்னேஷ் ராஜா :

சினிமாவில் எப்போதும் க்ரைம் திரில்லர் படங்களுக்கு மவுசு எப்போதும் குறைவதில்லை. அப்படி அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி வெளியானது போர் தொழில். இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

#image_title

5. ராம் சங்கையா :

கிராமம், கிராமத்து உறவுகளை சார்ந்த படங்களை ரசிகர்கள் விரும்புவர். அந்த வகையில் இந்தாண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெளியான திரைப்படம் தண்டட்டி. பசுபதி, ரோகிணி உட்பட பலர் நடிப்பில் உருவாகி இருந்த இந்தப் படத்தை ராம் சங்கையா இயக்கி இருந்தார். குடும்பங்கள் மத்தியில் இப்படம் வரவேற்பை பெற்றிருந்தது.

6. ராம்குமார் பாலகிருஷ்ணன் :

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா நடித்த ‘பார்க்கிங்’ படத்தைத் தந்தவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். சாதாரண பார்க்கிங் பிரச்சினையால் ஏற்படும் ஈகோ, எந்தளவுக்கு மனிதனை கொண்டு செல்கிறது என்பதை அளவாக, அழகாகத் திரைக்கதையாக்கி இருந்தார் இயக்குநர். இப்படம் டிசம்பர் மாதம் 1-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

#image_title

7. டி.அருள் செழியன் :

விதார்த், யோகிபாபு நடித்த ‘குய்கோ’ படத்தை இயக்கிய அருள் செழியன், பிரீஸர் பாக்ஸ் பின்னணியில், ஒரு காமெடி கதையை அழகாகச் கூறியிருந்தார். உணவர்வுகள் மிகுந்த இந்தப் படத்தை வெறும் காமெடி படம் எனக் கூறிவிட முடியாது.

8. ஹரிஹரன் ராம் :

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி இருந்த ஜோ படத்தை இயக்கியவர் ஹரிஹரன் ராம். கல்லூரி காதல், மோதல், விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டவர்களின் மனப்போராட்டம் ஆகியவற்றை ரசனையாகக் கொண்டிருந்தது இப்படம்.

9. ரவி முருகையா :

விதார்த், சரவணன் நடிப்பில் கடந்த 23-ம் தேதி வெளியான திரைப்படம் ஆயிரம் பொற்காசுகள். ஒரு புதையல், கிராமத்துக்குள் கொண்டு வரும் வில்லங்கத்தை லாஜிக்கான நகைச் சுவையோடு இப்படத்தில் கூறியிருந்தார் இயக்குநர் ரவி முருகையா.

#image_title

10. ரா.வெங்கட் :

காளி வெங்கட், பூ ராமு நடித்த கிடா படத்தை இயக்கி இருந்தார் ரா.வெங்கட். பேரனின் ஆசையை நிறைவேற்ற வறுமையில் இருக்கும் தாத்தா என்ன செய்கிறார் என்பதை அசலான வாழ்க்கை மூலம் இப்படத்தில் எடுத்துரைத்திருந்தார் இயக்குநர்.

Archana

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

1 மணத்தியாலம் ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

2 மணத்தியாலங்கள் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago