Categories: சினிமா

ரஜினி , முரளி மிஸ் செய்த வாய்ப்பை பயன்படுத்தி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த கேப்டன்… பெரிய அடையாளமாக அமைந்த அந்த படம் எது தெரியுமா..?

Spread the love

1986ல் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் அம்மன் கோவில் கிழக்காலே. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.  விஜயகாந்துடன் இணைந்து ராதா, செந்தில், ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, ராதாரவி, வினுச்சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது.

குறிப்பாக சின்னமணிக்குயிலே, கட வீதி, காலை நேர, ஒரு மூணு முடிச்சாலே, பூவ எடுத்து போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில்  உள்ளது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில், 150 நாட்களைக் கடந்தும், 20 திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்தும், படம் வெற்றிகரமாக ஓடியது.

விஜயகாந்தை கடைகோடி கிராமங்கள் வரை கொண்டு சேர்த்ததில் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்திற்கு முக்கிய பங்குண்டு. முதன்முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை வைத்து படத்தை இயக்க முடிவு செய்தாராம் இயக்குனர். ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் முரளி, ரேவதியை நடிக்க வைப்பதென முடிவு செய்து முரளிக்கு அட்வான்ஸும் கொடுத்தார் சுந்தர்ராஜன்.

கன்னடப் படத்தை முரளி முடிக்க வேண்டியிருந்ததால் அவரால் உடனடியாக கால்ஷீட் தர முடியவில்லை. அதனால், முரளிக்குப் பதில் விஜயகாந்த், ராதாவை வைத்து படத்தை எடுத்துள்ளார்.  இந்த படத்தில் விஜயகாந்த் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. கேப்டனின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

Begam

Recent Posts

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

5 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

7 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

14 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

17 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

21 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

24 minutes ago