அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுகவினர் நடிகர் விஜய்யின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யின் மனைவியைக் குறித்து ஊடகங்களில் விவாதிப்பதும், கேலிப்பொருள் ஆக்குவதும் மிகவும் இழிவான செயல் என்று அவர் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்துள்ள விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அவரது குடும்பத்தைப் பற்றிப் பேசுவதை அதிமுகவும் மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், விஜய்யின் மீது அவரது மனைவியை வைத்தே வழக்குத் தாக்கல் செய்து, அவரைத் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது போன்ற தரம் தாழ்ந்த அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்றும், அரசியலில் நேர்மையான முறையில் மோத வேண்டும் என்றும் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…