நாடு முழுவதும் ஜூலை 1 முதல் கட்டணம் உயர்வு… ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.. !

By Nanthini on ஆனி 25, 2025

Spread the love

ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவராக இருந்தால் 500 km வரையிலான தொலைவுக்கு டிக்கெட் கட்டண உயர்வு கிடையாது. அதேசமயம் 500 km க்கு மேல் பயணம் செய்பவருக்கு டிக்கெட் கட்டணம் உயர்வு இருக்கும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேலான பயணத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படுகின்றது.

அதாவது ஆயிரம் கிலோமீட்டர் பயணத்திற்கு ஆளா டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை பத்து ரூபாய் அதிகமாக இருக்கும். அதனைப் போலவே ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு 500 கிலோ மீட்டருக்கு மேல் ஒரு கிலோமீட்டர் க்கு 2 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகின்றது. அதேசமயம் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் கட்டண உயர்வு எதுவும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வருகின்ற ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. இந்த செய்தியை ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.