அவசரக் காலத்தில் கடன் வாங்க வேண்டாம் என நினைக்கும் ஊழியர்கள் பலரும் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருந்து பணத்தை எடுப்பார்கள். ஆனால் அப்படிப் பணம் எடுத்தாலும் அது நமது கைகளில் வர பல காலம் ஆவதாகப் புகார்கள் இருந்தது. இந்த பிரச்சினையைக் கருத்தில் கொண்டே இபிஎஃப்ஓ-ல் முக்கியமான மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி உங்களுடைய பிஎஃப் கணக்கிலிருந்து Auto Claim இல் இனி ஐந்து லட்சம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே இதன் மூலம் எடுக்க முடியும். இதற்கு எந்த ஒரு சான்றுகளும் தேவை இன்றி illness, Marriage, Housing உள்ளிட்ட காரணங்களை மட்டுமே தேர்வு செய்து அப்ளை செய்ய முடியும். இவ்வாறு நீங்கள் அப்ளை செய்த மூன்று நாட்களில் பணம் உங்கள் அக்கவுண்டில் வந்து சேர்ந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
