பள்ளி வேன் மீதி ரயில் மோதி விபத்து: “ஓட்டுநரே விபத்துக்கு காரணம்” ரயில்வே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on ஆடி 8, 2025

Spread the love

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து வந்த ரயில் மோதி இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.  மேலும் விபத்தின் போது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்திற்கு காரணம் கேட் கீப்பர் தூங்கியது தான் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ரயில்வே துறை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதாவது கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்த போது தண்டவாளத்தை கடந்து சென்று விடுவேன் என்று ஓட்டுநர் வற்புறுத்தி சென்றதே விபத்துக்கு காரணம் என்று விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.