ஒரே கல்லில் 2 மாங்காய்… இப்போது மாங்காயே இரண்டு… பாமகவை கேலி செய்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்..!!

By Soundarya on ஆடி 8, 2025

Spread the love

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மேடையில் பேசினார். அப்பொழுது ஜிகே மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பாமகவை அமைச்சர் விமர்சித்து பேசியுள்ளார். அதாவது “ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தற்போது மாங்காயே இரண்டு” என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜிகே மணி மற்றும் வெங்கடேஸ்வரனை வைத்துக்கொண்டு பாமகவை கேலி செய்யும் விதமாக எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.