மிகப் பிரபலமான ஜோடிகளில் ஒருவர்தான் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார். இப்படிபட்ட பிரபலத்தோடு கூடிய குடும்பத்தில் ஆராத்யா பிறந்தாலும் அவர் எளிமையாக தான் வளர்க்கப்பட்டுள்ளார் என்பதை அபிஷேக் பச்சன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் எங்கள் மகள் ஆராத்யா பச்சனிடம் தொலைபேசி கிடையாது. சமூக ஊடகங்களிலும் அவர் கிடையாது. இதற்கான முழு பெருமையும் என் மனைவி ஐஸ்வர்யா ராய் தான் சேரும்.
அவர் தான்இந்த விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடோடு கவனித்து வருகிறார் என்று கூறியுள்ளார். இது போன்ற பிரபலத்தின் குடும்பத்தில் வளர்கிற பிள்ளைகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் நாட்டம் உடையவர்களாக வளரும் நிலையில் ஆராத்யா மிகவும் தனிமையான சூழலில் வளர்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இது பெற்றோர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறுவயதில் குழந்தைகளை தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி உண்மையான வாழ்க்கை புரிந்து கொள்ள வழி வகுக்கும் வகையில் வளர்த்தல் என்பது பெரும்பாலானோருக்கும் உத்வேகம் தரும் ஒரு செய்தியாகவே உள்ளது.
