ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தீய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பத்து லட்சத்து 90 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். தீபாவளி போனஸ் வழங்க 1,865 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்
