பிரபல நடிகரான ரவி மோகன் கராத்தே பாபு, ஜீன் ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கராத்தே பாபு படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. ரவி மோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் அறிமுக விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில் ரவி மோகன் தனக்கு சொந்தமான ஈசிஆர் சொகுசு பங்களாவை வைத்து வங்கியில் கடன் வாங்கியுள்ளார். கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக அந்த பங்களாவுக்கு தவணை தொகையை செலுத்தாததால் வங்கி தரப்பில் ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் ரவி மோகன் அந்த நோட்டீசை பெற்றுக் கொள்ளாமல் வங்கியில் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வதாக கூறினார். இதுவரைக்கும் அவர் வங்கிக்கு சென்று பிரச்சனையை தீர்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த சொகுசு பங்களாவுக்கு வெளியே ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அவரது அலுவலகத்திலும் அந்த நோட்டீஸ் ஒட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரவி மோகன் அதிர்ச்சியில் உள்ளார்.
