பிரபல நடிகரான அஜித் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். அஜித்தின் அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த ஆண்டு இறுதியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அவர் தான் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். மார்க்கோ படத்தின் இயக்குனர் ஹனீப் அதேனி இயக்கத்தில் அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்கலாம் என திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு தில் ராஜு அஜித்திற்கு சம்பளம் மிகக் குறைவாக நிர்ணயத்துள்ளார். இதனால் சுரேஷ் சந்திரா அஜித்திடம் ஆலோசித்து விட்டு கூறுகிறேன் என பின் வாங்கியதாக தெரிகிறது.
