மணிரத்னம் என்று ஒருவரை சந்தித்ததும் எல்லாமே மாறியது… ரஹ்மான் சொன்ன பதில்!

By vinoth on தை 11, 2025

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.

   

ரஹ்மான் தன்னுடைய முதல் படமான ‘ரோஜா’வுக்காக தேசிய விருது வாங்கிய போது அவரது வயது 26தான். தன்னுடைய 15 ஆவது வயதில் இருந்து அவர் பல இசையமைப்பாளர்களிடம் இசைக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கோபிநாத்துக்கு அளித்த ஒரு நேர்காணலில் மனம் திறந்து பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளர்.

 

அதில் கோபிநாத் தமிழ் சினிமாவில் எம் எஸ் வி, ராமநாதன் மற்றும் இளையராஜா என பல ஜாம்பவான்கள் இசையமைத்துள்ளார்கள். அவர்கள் கொடுக்காத ஒன்றை கொடுக்க முடியுமா சந்தேகம் எப்போதாவது உங்களுக்கு இருந்துள்ளதா எனக் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ரஹ்மான் “இதெல்லாம் மணிரத்னம் என்று ஒருவர் வந்து கதை சொல்வதற்கு பின்னால் மாறிவிட்டது. ஏனென்றால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின்  படங்களுக்கு நான் ரசிகன், அவரே என்னை அறிமுகப்படுத்துகிறார் என்பதால் நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.