ஹாரிஸ் ஜெயராஜ் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்.. வெளியான புகைப்படங்கள்.!

By Nanthini on ஜனவரி 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னையில் கிறிஸ்தவ குடும்பத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்தவர்.

   

கேகே நகரில் உள்ள கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். இவருடைய தந்தை ஒரு கிட்டார் இசை கலைஞர்.

   

 

தந்தையைப் போலவே இசை மீது ஆர்வம் கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் ஐந்து வயதிற்கும்போது அப்துல் சர்தார் என்பவர் முதன் முதலில் ஹாரிஸின் இசை ஆர்வத்தை கண்டறிந்தார்.  இவருக்காக சிறிய கிட்டார் கருவி ஒன்றை பரிசளித்த நிலையில் அது ஹாரிஸ் ஜெயராஜ் இசை ஆர்வத்துக்கு ஊந்துகோளாக இருந்தது.

முதன்முதலாக அன்புக்கு நான் அடிமை என்ற படத்தின் கன்னட ரீமேக்கிற்க்காக தனது 12 வயதில் இசை கலைஞராக பணியாற்றினார். சீவலப்பேரி படத்தின் மூலம் தான் இவருக்கு ஒரு இசை கலைஞருக்கான அங்கீகாரம் கிடைத்தது.

படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றுவதற்கு முன்பு தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் இசைக்காக வெறும் 200 ரூபாய் சம்பளம் தான் வாங்கினார்.

வழக்கமாக தேடிச் சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இவருக்கு முதல் படமான மின்னலே படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தேடி வந்தது.

கௌதம் மேனனுக்கும் அது முதல் படம் என்பதால் அவர்தான் ஹாரிஸ் ஜெயராஜ் தன் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என கேட்டிருந்தார். உடனே அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அதன்பிறகு கலைப்புலி தாணு தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் கௌதம் மேனன் இடம் வாக்கு கொடுத்து விட்டதால் கமல் பட வாய்ப்பை ஹாரிஸ் நிராகரித்துள்ளார். மின்னலே படத்தின் இசை பட்டித் தொட்டி எங்கும் பிரபலமான நிலையில் முதல் படத்திலேயே உச்சத்திற்கு சென்று விட்டார்.

அந்த வெற்றியை தொடர்ந்து லேசா லேசா, மஜ்னு மற்றும் சாமி என மெலடியில் புது வித்தியாசத்தை கொண்டு வந்து தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கினார்.

டூயட் பாடல் வந்தால் திரையரங்கை விட்டு ரசிகர்கள் வெளியே சென்ற அந்த காலகட்டத்தில் இவருடைய மெலடி பாடல்கள் ரசிகர்களை இருக்கையிலேயே கட்டி போட்டது.

ஏ ஆர் ரகுமானுக்கு அடுத்தபடியாக முதல் படத்திலிருந்து ரசிகர்களை தன் வசப்படுத்திய இசையமைப்பாளர் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜ் தான். 1992 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ ஆர் ரகுமான் பெற்று வந்த நிலையில் அதற்கு முடிவு கட்டிய ஹாரிஸ் ஜெயராஜ் 2001 ஆம் ஆண்டு மின்னலே படத்துக்காக ஃபிலிம் பேர் விருது பெற்றார்.

தொடர்ந்து பத்து ஆண்டுகள் கோலோச்சி வந்த ஹாரிஸ் ஜெயராஜ், பின்னர் படிப்படியாக காணாமல் போனார். அனிருத் வருகைக்குப் பிறகு ஹாரிஸ் ஓரம் கட்டப்பட்டதாக விமர்சனம் இருந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அனேகன் மற்றும் என்னை அறிந்தால் என இரண்டு சூப்பர் ஹிட் ஆல்பம் கொடுத்து கம்பேக் கொடுத்தார்.

இவருடைய ஸ்பெஷல் குவாலிட்டியே அவரின் இசையமைப்பின் தரம் தான். இவருக்கு சொந்தமான ஸ்டூடியோ H, உலக தரத்தில் சிறந்த முதல் 10 ஸ்டூடியோக்களில் ஒன்றாக உள்ளது.

சென்னையில் உள்ள இந்த ஸ்டூடியோ சுமார் 18 கோடி செலவில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த கட்டிட வடிவமைப்பாளர்களைக் கொண்டு நான்கு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.

இந்த ஸ்டூடியோவில் ஹாரிஸ் முதன் முதலில் இசையமைத்த படம் இருமுகன். ஏ ஆர் ரகுமானும் யுவன் சங்கர் ராஜாவும் கலந்த ஒரு கலவையாக இருந்ததால்தான் ஹாரிஸ் ஜெயராஜுக்கு இன்று அளவு மவுசு குறையவில்லை.

தற்போது அதிகப்படியான படங்களுக்கு அவர் இசை அமைக்காவிட்டாலும் அவரின் பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இவர் இறுதியாக ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதேசமயம் ஹாரிஸ் ஜெயராஜ் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.