மகளுக்கு தீவிர ரசிகையின் பெயரை வைத்த ரகுமான்.. பல ஆண்டு சீக்ரெட்டை போட்டுடைத்த ரகுமான்..!!

By admin on ஐப்பசி 15, 2023

Spread the love

1990-களில் முன்னணி ஹீரோவாக பல மந்தரகுமான் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1989-ஆம் ஆண்டு வெளியான புது புது அர்த்தங்கள் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தற்போது வில்லன், குணசித்திர கதாபாத்திரங்கள் என ரகுமான் பிசியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு மெஹ்ருனிஷா ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

இதில் மெஹ்ருனிஷா ரகுமான் இசை புயல் ஏ.ஆர் ரகுமான் மனைவி சைரா பானுவின் உடன் பிறந்த தங்கை ஆவார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ரகுமான் தீவிர ரசிகை குறித்து மனம் திறந்து பேசினார். அதாவது ரகுமானின் தீவிர ரசிகை இலங்கையில் இருந்துள்ளார்.

   

 

 

அவர் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது ரகுமானை பார்த்து விட வேண்டும் என் ஆசையாக இருந்துள்ளார். அதே நேரம் ஷூட்டிங்கிற்காக இலங்கை சென்ற ரகுமானை அந்த ரசியை நேரில் சந்தித்துள்ளார். இதனையடுத்து அந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது வீட்டிற்கு சென்று இரவு விருந்து சாப்பிட்டுள்ளார்.

அந்த வீட்டில் பாத்ரூமில் இருந்து பெட்ரூம் வரை திரும்பிய பக்கமெல்லாம் ரகுமானின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் ரகுமானின் நேரில் சந்திக்கும் வரை திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என அந்த ரசிகை பிடிவாதமாக இருந்துள்ளார். இதனை அறிந்த ரகுமான் திருமணம் செய்து கொள்ளுமாறு ரசிகைக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இப்படி தனக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்து தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு அந்த ரசிகையின் பெயரை ரகுமான் வைத்துள்ளார். இதேபோல அந்த ரசிகையும் அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ரகுமானின் பெயரை வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.