என்னது….! பிரபல youtube இர்ஃபான் லியோ படத்துல நடிக்கிறாரா?…. இதுல அவர் கதாபாத்திரம் இதுதானாம்…!!!

By Mahalakshmi on ஐப்பசி 15, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கின்றது. இதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

   

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாநகரம், மாஸ்டர், விக்ரம் உள்ள திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டுக்கு கொடுத்த நிலையில் லியோ படமும் வெற்றியைக் கொடுக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் விஜயின் பீஸ்ட் மற்றும் வாரிசு திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது.

   

 

இதனால் அவருக்கும் லியோ மிக முக்கிய திரைப்படமாக கருதப்பட்டு வருகின்றது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் பிரபல youtubeபர்கள் யாராவது நடிப்பது வழக்கம். அந்த வகையில் லியோ திரைப்படத்தில் யூடியூபர் இர்பான் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. காஷ்மீர் செல்ல உள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இர்பான் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் பகிர பலரும் அந்த படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் லியோ திரைப்படத்தில் இர்பான் ஒரு ரோலில் நடிப்பதாகவும் விஜயின் சாக்லேட் பற்றிய இர்ஃபான் ரிவ்யூ செய்வது போல கதை அம்சம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இது வெறும் கணிப்புதான் தவிர உண்மையாக இதைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.