தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். சினிமாவில் ராகவா லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த அவரை நடனப்பள்ளியில் சேர்த்து விட்டார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குருப் டான்சராக பணியாற்றிய இவர் சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் திரைப்படம் மூலமாக இவருக்கு நடன இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் பல திரைப்படங்களில் நடந்த இயக்குனராக மாஸ் காட்டியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த முனி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து காஞ்சனா சீரியஸை தொடர்ந்து இயக்கி வருகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜிகர்தண்டா 2 இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
இதனிடையே சினிமாவில் பிஸியாவா இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார். இவரால் ஏராளமான குழந்தைகள் இன்று சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவரின் அறக்கட்டளைக்கு பலரும் டொனேஷன் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கிராம ஒன்றில் வசித்து வரும் மக்கள் பல வருடங்களாகவே உப்பு தண்ணீயை குடித்து வந்துள்ளார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் தாராள மனசுடன் லட்சக்கணக்கில் செலவு செய்து அவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பதற்கு வாட்டர் பில்டர் வைத்து கொடுத்துள்ளார் லாரன்ஸ். இதனையடுத்து அந்த கிராம மக்கள் மகிச்சியோடு அவரை மனதார பாராட்டி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…
நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும்,…
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…
வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…