Categories: சினிமா

“சூர்யா 45” படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியதற்கான காரணம்.. வெளிவந்த உண்மை..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 45 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். ஆர் ஜே பாலாஜி படத்தை இயக்கும் நிலையில் கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடத்தப்பட்டு அதே பகுதியில் படப்பிடிப்பும் தொடங்கியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாக பல நேர்காணலில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால் திடீர் திருப்பமாக சூர்யா  45 படத்தில் இருந்து ஏ ஆர் ரகுமான் விலகி உள்ளதாக தகவல் வெளியானது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் ஒளிப்பதிவாளரை பட குழு அறிவித்தபோது அந்த போஸ்டரில் ஏக ஆர் ரகுமான் பெயர் இடம்பெறவில்லை. இருந்தாலும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வராத நிலையில் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமான் படத்தில் இருந்து விலகி இருப்பதை பட குழு ஏறக்குறைய உறுதி செய்துள்ளது. சூர்யா 45 படத்தின் புதிய இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 45 படத்தின் இசை அமைப்பாளர் இளசுகளின் நியூ சென்சேஷன் சாய் அபயங்கர் தான்.

கட்சி சேர பாடல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் LCU படமான பென்ஸ் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகியுள்ள நிலையில் அடுத்து சூர்யா படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படியான நிலையில் சூர்யா 45 படத்திலிருந்து ஏ ஆர் ரகுமான் விலகியதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் ஒரு வருடம் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அவருடைய மகள் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமான் விரைவில் ரிலீசாக உள்ள படங்களுக்கு முதலில் இசையமைத்துவிட்டு அதன் பிறகு தாமதமாக ரிலீஸ் ஆக உள்ள படங்களுக்கு இசையமைக்க திட்டமிட்டுள்ளார். சூர்யா 45 திரைப்படம் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள காரணத்தால் அதற்கு முன்னதாக ரிலீசாக உள்ள படங்களுக்கு இசையமைக்க ஏ ஆர் ரகுமான் திட்டமிட்ட நிலையில் படக்குழு அவரை ஒரேயடியாக தூக்கிவிட்டு புதிய இசையமைப்பாளரை நியமித்துள்ளது.

Nanthini

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

6 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

32 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

43 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

56 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

56 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago